அன்வார் டி.ஏ.பியைக் கண்டுக்க வேண்டாம்! – மகாதீர்
- Thinagaren Sanggaren
- 14 Dec, 2025
டிசம்பர் 14,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு டி.ஏ.பி கட்சி முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை அன்வார் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார். டி.ஏ.பியின் கோரிக்கையை அன்வார் நிராகரிப்பதால் டி.ஏ.பி ஆட்சியிலிருந்து விலகும் என்றாலும் அதனால் நாட்டுக்கு நன்மையே என மகாதீர் தெரிவித்தார். இது தாம் பிரதமராக இருந்த போது டி.ஏ.பி என்ன செய்ததோ அதையே மீண்டும் செய்வதாக மகாதீர் சாடினார்.
டி.ஏ.பி மக்கள் ஆதரவை இழந்து வீழ்ந்துவிட்டது. அப்படியான டி.ஏ.பி ஆட்சியிலிருந்து விலகினால் அது மேலும் டி.ஏ.பியைப் பலவீனப்படுத்தும் என்பதால் டி.ஏ.பி ஆட்சியிலிருந்து விலகாது என மகாதீர் தெரிவித்தார். அன்வார் டி.ஏ.பியின் கோரிக்கை ஏற்க வேண்டிய எந்தவோர் அவசியமும் இல்லை. இப்போது அன்வார் என்ன செய்வார்? அது தான் கேள்வி. நான் என்ன செய்தேனோ, அதை அன்வார் செய்ய துணிவாரா என்றால் அது கிடையாது என முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



