நாட்டின் சுதந்திரத்தை அன்வார் அடமானம் வைத்துவிட்டார்! – மகாதீர் சாடல்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 31,

அமேரிக்காவுடன் மலேசியா கையெழுத்திட்டிருக்கும் ஒப்பந்தம் மலேசியாவை அமேரிக்காவின் அடிமையாகப் பிரகடனம் செய்ததற்குச் சமம் என முன்னாள் பிரதமர் TUN MAHATHIR MOHAMAD கடுமையாகச் சாடினார். அமேரிக்காவுக்கு அடிமையாக இருக்கவா 1957 நாம் சுதந்திரம் பெற்றோம்? அன்வார் அமேரிக்காவிடம் நாட்டை முழுவதுமாக விற்றுவிட்டதாக TUN MAHATHIR தெரிவித்தார். நாட்டின் அனைத்து வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் அமேரிக்காவின் காலடியில் வைத்த அன்வாருக்கு நாட்டின் வரலாறு மீது கொஞ்சமும் அக்கறை இல்லை என TUN MAHATHIR தெரிவித்தார்.

கடந்த 1957 முதல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மற்ற நாடுகளுடன் மலேசியா கையெழுத்திட்ட எந்தவோர் ஒப்பந்தத்திலும் கட்டளை இருந்ததில்லை. ஆனால் அன்வார் அமேரிக்க அதிபர் டிரம்பிடம் செய்துக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் மலேசியாவின் அயல்நாட்டு வர்த்தகத்தில் அமேரிக்காவின் பங்களிப்பை மீறி செயல்பட கூடாது என்கிற கட்டளை இடம்பெற்றிருப்பதாக TUN MAHATHIR சுட்டிக்காட்டினார். இதை அன்வார் கவனிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் முதல் விதியே அமேரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் முதன்மைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக TUN MAHATHIR தெரிவித்தார். அமேரிக்காவின் பொருள்கள் மலேசியாவில் தடையின்றி இறக்குமதி செய்ய அன்வார் ஒப்புதல் அளித்துள்ளார். அமேரிக்கா அதன் பொருள்களின் விலையை உயர்த்தினால் நாம் அந்த பொருள்களை நிராகரிக்க முடியாது. அதை வாங்கியாக வேண்டிய கட்டாயத்திற்கு மலேசியா தள்ளப்படும். இது கூடவா அன்வாருக்குத் தெரியாது? என முன்னாள் பிரதமர்  TUN MAHATHIR MOHAMAD கடுமையாகச் சாடினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *