நான் நீதிமன்றம் சென்றால் என்னுடன் அன்வாரின் மனைவியும் வருவாரா? மகாதீர் சவால்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 23,

நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim பத்து பூத்தே விவகாரத்தில் தன் மீது பாவப்பட்டு வழக்கு தொடுக்கவில்லை என கூறியிருப்பதை முன்னால் பிரதமர் TUN DR MAHATHIR MOHAMAD கடுமையாகச் சாடினார். என் மீது பாவப்பட்டு அன்வார் இதைத் தெரிவித்தார் என்பதை நான் நம்பவில்லை. அன்வார் வெறுக்கும் நபர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நான் தான் என்பதால் என்னை இவ்வளவு எளிதாக விட்டு விட அன்வார் நினைக்க மாட்டார் என  TUN DR MAHATHIR MOHAMAD தெரிவித்தார். பத்து பூத்தே விவகாரத்தில் என் தலைமையிலான அப்போதைய அரசாங்கம் அதிகாரத்தை மீறியிருப்பதாகத் தேசிய நீதி ஆணையம் தெரிவித்தும் அன்வார் வழக்கை நிராகரிக்கிறார் என்றால் நீதிமன்றத்தில் எந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் எந்த வழக்கு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதை அன்வார் முடிவு செய்கிறாரா எனும் கேள்வியை TUN DR MAHATHIR MOHAMAD முன் வைத்துள்ளார்.

பத்து பூத்தே விவகாரத்தில் அன்வார் என்னை மன்னிப்பதாகத் தெரிவிக்கிறார். ஆனால் நான் மன்னிப்பே கேட்கவில்லையே, மன்னிப்பே கேட்காத என்னைத் தானாக முன்வந்து அன்வார் மன்னிக்கிறார் என்றால் அன்வாருக்கு மிக பெரிய ஆதாயம் இருப்பதாகவே தாம் கருதுவதாக TUN DR MAHATHIR MOHAMAD தெரிவித்தார். 2018 என் தலைமையிலான அரசாங்கத்தில் துணைப் பிரதமராக இருந்த WAN AZIZAH என்னோடு நீதிமன்றத்திற்கு வர வேண்டுமே என்பதால், தன் மனைவியைக் காப்பாற்ற கணவன் இப்படி நாடகமாடுவதாக முன்னாள் பிரதமர் TUN DR MAHATHIR MOHAMAD சுட்டிக்காட்டினார். உண்மையில் 100 வயதாகினாலும் நான் நீதிமன்றம் செல்வதற்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கும் தயங்கமாட்டேன் என TUN DR MAHATHIR MOHAMAD நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *