மாநில முதலமைச்சர்களுடன் அன்வார் சந்திப்பு! அரசியல் நோக்கமல்ல!
- Thinagaren Sanggaren
- 08 Oct, 2025
அக்தோபர் 8,
மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் அன்வார் நடத்திய சந்திப்பில் அரசியக் நோக்கங்கள் கொண்டது இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் விளக்கமளித்தார். இது ஒரு வழக்கமான சந்திப்பு மட்டுமே என்றும் அரசியல் நகர்வுக்கான சந்திப்பு இல்லை என்றும் அன்வார் தெரிவித்தார். இந்த சந்திப்பில் நாட்டின் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்றதாகவும் மடானி அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசின் மூலமாகச் செயல்படுத்துவதற்கான அரசு ஒழுங்கு முறை சந்திப்பு இது என்றும் அன்வார் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது முக்கிய அமைச்சர்களுடன் துணைப்பிரதமர்களான ZAHID HAMIDI, FADHILA YUSOF ஆகியோருடன் மாநில மெந்திரி பெசார்களும் கலந்து கொண்டு மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நாட்டின் அரசு பொது நிகழ்ச்சிகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் கடந்த 2022 முதல் தாம் பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து நடத்தப்படும் 147 சந்திப்புக் கூட்டம் இது என்பதை அன்வார் சுட்டிக்காட்டினார். இந்த கூட்டத்தில் அரசியல் தொடர்பாகவும் அரசியல் நியமனங்கள் தொடர்பாகவும் எந்தவொரு கலந்துரையாடலும் நிகழவில்லை என அன்வார் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



