அன்வாருக்கு ஞாபக மறதி! தேர்தல் வாக்குறுதியை மறந்த அன்வார்! – முகைதீன் சாடல்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 21,

பிரதமர் Datuk Seri Anwar Ibrahim பிரதமரானதும் கடந்த காலங்களில் எதற்காகப் போராடினார் என்பதையே மறந்து விட்டார் என முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் எதிர்கட்சியாக இருந்த போது தேசத் துரோகச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். இப்போது பிரதமரானது அதே தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் பெரிக்காத்தான் தலைவர்களைக் கைது செய்கிறார் என Tan Sri Muhyiddin Yassin சாடினார். 2018-இல் அம்னோ எதிர்கட்சியாக இருந்த போதும் தேசத்துரோகச் சட்டத்தை எதிர்த்தனர். ஆனால் இப்போது அவர்களே அதைச் செயல்படுத்துகிறார் என Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார். 

பெருசத்து இளைஞர் பிரிவுத் தலைவர் Hilman Idham சட்டத் திருத்தம் குறித்து பேசியதால் கைது செய்யப்பட்டிருப்பதை Tan Sri Muhyiddin Yassin கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். பக்காத்தான் தேர்தல் வாக்குறுதியாகத் தேசத்துரோகச் சட்டத்தை ஒழிப்போம் என முழக்கமிட்டனர். அன்வார் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்து விட்டது. பல சட்டங்களைத் திருத்தம் செய்த அன்வார், தேர்தல் வாக்குறுதியையும் மறந்து விட்டார், அன்வாருக்கு ஞாபக மறதி என நாம் நம்புவோம், ஆனால் இது அன்வாரின் பாசாங்குத்தனம் என Tan Sri Muhyiddin Yassin கடுமையாகச் சாடினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *