யாரையும் சிறையில் அடைக்க நான் விரும்பவில்லை! ஆனால்......

top-news

ஜூன் 18,


என்னை சிறையில் அடைந்ததற்காக நான் பழிவாங்குவதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால் யாரையும் சிறையில் அடைக்க நான் விரும்பவில்லை என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார். நாட்டின் வளத்தையும் மக்கள் பணத்தையும் சூரையாடியவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு வலியுறுத்தி வருகிறேன், ஆனால் தனிப்பட்ட நபரைக் கைக்காட்டி அவர்களுக்கு எதிராகச் செயல்படுங்கள் என நான் யாரையும் வலியுறுத்தியது கிடையாது என Datuk Seri Anwar Ibrahim திட்டவட்டமாக மறுத்தார். 

ஊழல் செய்த அரசியல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பெரு நிறுவன முதலாளிகள், தொழிலதிபர்கள் என ஆளுமைமிக்க பலரின் மீதான ஊழல் புகார்களையும் பணமோசடி வழக்குகளையும் முழுமையாக வெளியிட வேண்டும் என்றும் விசாரணையில் இருக்கும் வழக்குகளை முறையாக முடிக்கும்படியும் தாம் வலியுறுத்தியதால் எனக்கு ஆதரவளித்த பலரும் என்னை விட்டு விலகியதாகவும் தனக்கான ஆதரவை மீட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். உண்மையில் நான் யாரையும் அப்படி நினைக்கவில்லை, ஊழல்வாதிகளை அடையாளப்படுத்தி அவர்களைச் சட்டம் என்ன செய்யவிருக்கிறதோ செய்யட்டும் என அமைதியாகவே இருக்கிறேன் என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.


PM Anwar Ibrahim menegaskan beliau tidak berniat memenjarakan sesiapa demi balas dendam. Namun, beliau mahu tindakan tegas diambil terhadap mereka yang menyeleweng dana negara, termasuk ahli politik, penjawat awam dan tokoh korporat terbabit rasuah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *