அழைப்பில்லாமலே அன்வார் வெளிநாடுகளுக்குச் செல்கிறாரா? – பெரிக்காத்தான் கேள்வி!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 21,

பிரதமர் Dato’ Seri Anwar Ibrahim மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்குச் சம்மந்தப்பட்ட நாடுகளிலிருந்து அழைப்புகள் இல்லாமலே அன்வார் தன்னிச்சையாக அந்த நாடுகளுக்குச் செல்வது மலேசியாவின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகப் பெரிக்காத்தானின் Machang நாடாளுமன்ற உறுப்பினர் Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான திட்ட வரைவுகள் வெளியுறவு அமைச்சின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan மறந்துவிட்டாரா எனும் கேள்வியை Wan Ahmad Fayhsal முன் வைத்தார்.

நாட்டைப் பிரதிநிதித்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் அன்வார் அழைப்பில்லாமல் செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும் அன்வார் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி முன்னமே அந்தந்த நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan பதிலளித்தார். மேலும் முதலீடுகளைப் பெறும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் பிரதமர் அன்வாரின் பயணங்கள் குறித்து முன் கூட்டியே வெளிப்படையாக அறிவிப்பதில் பாதுகாப்புச் சிக்கல்களை ஏற்படுத்தும் என வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *