அன்வாருக்கு எதிரான வேதமூர்த்தியின் வழக்கு! பெரிக்காத்தானுக்குத் தொடர்பு இல்லை! தக்கியுடீன் விலகல்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 14,

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் வேதமூர்த்தி தாக்கல் செய்திருக்கும் நீதிமன்ற வழக்கிற்கும் பெரிக்காத்தானுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என எதிர்க்கட்சித் தலைமை கொறடா தக்கியுடீன் ஹசான் இன்று விளக்கமளித்தார். சிறையிலிருந்து பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதும் தேர்தலில் அன்வார் போட்டியிட்டது சட்டத்திற்குப் புறம்பானது என வேதமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்தார். அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தாம் பங்கேற்றாலும் இது முழுக்க முழுக்க வேதமூர்த்தியின் நிலைபாடு என்றும் பெரிக்காத்தானின் நிலைப்பாடு அல்ல என்றும் தக்கியுடீன் ஹசான் தெரிவித்தார்.

வேதமூர்த்தியின் தனிப்பட்ட வழக்கில் பெரிக்காத்தான் பின்னிருந்து இயக்குவதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் ஒரு வழக்கறிஞராக மட்டுமே வேதமூர்த்தியின் செய்தியாளர் சந்திப்பில் தாம் பங்கேற்றதாக தக்கியுடீன் ஹசான் தெரிவித்தார். அன்வாருக்கு வழங்கப்பட்டிருக்கும் பொதுமன்னிப்பு அப்போதைய மாமன்னரான கிளாந்தான் சுல்தான் தொடர்புடையது என்பதில் எந்தவொரு எதிர் கருத்தையும் பெரிக்காத்தான் கொண்டிருக்கவில்லை என்பதையும் தக்கியுடீன் ஹசான் சுட்டிக்காட்டினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *