எனக்கு யார் மீதும் கோபம் இல்லை! – அன்வாரின் பெருமிதம்!
- Thina S
- 28 Oct, 2024
அக்தோபர் 28,
யாரையும் தாம் எதிரியாகக் கருதவில்லை என பிரதமர் அன்வார் வெளிப்படையாகத் தெரிவித்தார். தன்னுடைய அரசியல் பயணத்தில் தன்ன வீழ்த்துவதற்காகச் சிலர் செயல்ப்பட்டதைத் தாம் அறிவேன் என்றாலும் அவர்களைப் பழிவாங்குவதற்காகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் அவர்களை எதிர்ப்பதற்காகத் தாம் பிரதமராகவில்லை என்றும் அன்வார் தெரிவித்துள்ளார். கொள்கையில் முரண் என்பதைத் தாம் மறுக்கவில்லை என்றும் அதற்காகக் கடுமையாக அவர்கள் மீது நடந்துக் கொள்வேன் என்றும் எதிர்பார்க்க வேண்டாம். இவர்களுக்காகவோ, எனக்காகவோ நான் பிரதமராகப் பொறுப்பேற்கவில்லை, அனைத்து மலேசியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், மலேசியாவை வளமான எதிர்காலத்திற்கான சூழலை ஏற்படுத்தவும் தான் தாம் பிரதமராக இருக்கிறேன் என அன்வார் வெளிப்படையாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *