நான் திருடவில்லை என மனசாட்சியுடன் அவர்கள் சொல்வார்களா? – அன்வார் சவால்!
- Thinagaren Sanggaren
- 27 Jul, 2025
ஜூலை 27,
எனக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் எனக்கு எதிரியாக நான் கருதுவதில்லை என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim இன்று மூவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். அரசாங்கப் பணத்தைத் திருடியும் அரசு திட்டங்களின் மூலமாக லாபம் பெறாத ஓர் அரசியல்வாதியாக நான் இருக்கிறேன் என்பதை என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் என்னால் சொல்ல முடியும். ஆனால் அவர்கள் சொல்ல முடியுமா? மேடை அழகுகளுக்காக அவர்கள் விமர்சிக்கலாம்,ஆனால் மனசாட்சியுடன் சொல்ல வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார்.
வரி தொடர்பாக எனக்கு எதிராக நேற்று பலரும் பேசினார்கள். பேசியவர்கள் எல்லோரும் முதலாளிகள் என்பதை நாம் அறிந்திருக்க
வேண்டும் என Datuk Seri
Anwar Ibrahim நினைவூட்டினார். 1 மில்லியன் லாபம் பெறும் முதலாளி 1,500 ரிங்கிட் மட்டும் ஊழியருக்கு ஊதியமாக வழங்குவது நியாயமா? வரி செலுத்துவது முதலாளிகள் தான். அவர்களுக்குத் தான் வரி என்பது ஒரு பிரச்சனை.
இப்போது புரியும் என நினைக்கிறேன், என்னை ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள், உண்மையில் வரி விலக்கு வேண்டும் என நினைக்கும் முதலாளிகள் நேரடியாக மக்கள்
நலத்திட்டங்களைச் செய்யலாம் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். இப்போது ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் 1,700 ரிங்கிட்டாக உயர்த்தியது முதற்கட்ட உயர்வு மட்டும் தான், படிப்படியாக அடிப்படை ஊதியத்தை உயர்த்துவோம் என Datuk Seri Anwar
Ibrahim நம்பிக்கை அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



