புதிய பி.கே.ஆரை ஏற்றுக்கொள்ளுங்கள்! உறுப்பினர்களுக்கு அன்வார் வேண்டுகோள்!
- Thinagaren Sanggaren
- 28 Jul, 2025
ஜூலை 28,
பி.கே.ஆர் கட்சியின் உள்விவகாரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உறுப்பினர்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமரும் பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான Datuk Seri Anwar Ibrahim வேண்டுகோள் விடுத்துள்ளார். பி.கே.ஆரின் தலைமை எந்தவொரு கட்சி உறுப்பினரையும் விலக்கி வைக்க விரும்பவில்லை என்றும் பதவிகளில் இருந்தால் மட்டும் தான் அவர்களின் கருத்துகளுக்குத் தலைமை செவிசாய்க்கும் என உறுப்பினர் எண்ண வேண்டாம் என கோலாலம்பூர் பி.கே.ஆர் தொகுதித் தலைவர்களுடனான சந்திப்பின் போது Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
எல்லாவற்றையும் ஒரு நொடியில் மாற்றிவிட முடியாது என்பதைக் கட்சியினர் உணர வேண்டும். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ஆட்சியை அமைத்திருக்கிறோம். இது நிலையான ஆட்சியா என்றால் இது கூட்டணி ஆட்சி, தனித்த பெரும்பான்மையில் பி.கே.ஆரும் பக்காத்தானும் ஆட்சி அமைந்திருந்தாலும் விரல் சொடுக்கில் மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியாது. நாம் எதிர்பார்த்திருந்த சீர்த்திருத்தங்களைப் படிப்படியாக மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பதால் பி.கே.ஆரின் தலைமைக்கு உரமாக அனைத்து பி.கே.ஆர் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



