உள்ளூர் சுற்றுலா தலங்களின் விலைகள் குறைக்கப்படும்! - பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உறுதி!
- Thinagaren Sanggaren
- 14 Oct, 2025
அக்தோபர் 14,
உள்ளூர் சுற்றுலா தலங்களின் கட்டணங்கள் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். பெரும்பாலான மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா மேற்கொண்டாலும் மலேசியாவில் உள்ள சுற்றுலா தலங்களைப் புறக்கணிப்பதாகவும் ஆய்வுகள் காட்டுவதாகப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணம் சுற்றுலா தலங்களில் விதிக்கப்பட்டும் கட்டணங்கள் வெளிநாட்டு நாணயத்தின் மதிப்பில் இருப்பதாகப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
குறிப்பாக லங்காவி, பங்கோர், தியோமான் ஆகிய சுற்றுலா தீவுகளின் கட்டணங்களைக் கட்டுப்படுத்தினால் பெரும்பாலான மலேசியர்கள் வெளிநாட்டுச் சுற்றுலாவிற்குச் செலவு செய்ய நினைப்பதை விடவும் குறைவாகவும் நிறைவாகவும் உள்நாட்டுச் சுற்றுலா தலங்களில் செலவிடலாம் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். முதற்கட்டமாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள சுற்றுலா தலங்களின் கட்டணங்களைக் கட்டுபடுத்தவிருப்பதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



