அன்வாருக்குக் கொலை மிரட்டல்! இருவர் கைது! - Datuk M Kumar

top-news
FREE WEBSITE AD

 ஆகஸ்ட் 25,

நேற்று பிரதமர் அன்வார் இஸ்ரேலுக்கு எதிராகத் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக பிரதமர் அன்வாருக்குக் கொலை மிரட்டல் விடுத்த இருவரைக் காவல்துறை கைது செய்திருப்பதாகத் தேசியக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk M Kumar தெரிவித்தார். பலமான இஸ்ரேலை அன்வார் எதிர்த்தால் அன்வாரின் வீட்டை இஸ்ரேல் தாக்க வேண்டும் என i.Facto.Real எனும் X கணக்கின் உரிமையாளரையும் Chong.Kaht.ze எனும் X கணக்கின் உரிமையாளரையும் கைது செய்திருப்பதாக Datuk M Kumar தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் மலேசியர்கள் என்றும் 37 வயது 43 வயதுள்ள இருவரும் தேசத்துரோகக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk M Kumar உறுதிப்படுத்தினார். முதல் நபர் 2 நாள்கள் தடுப்புக் காவலிலும் மற்றொருவர் 4 நாள்கள் தடுப்புக் காவலிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk M Kumar விளக்கமளித்தார். நாட்டின் அமைதிக்கு எதிரான செயல்களைத் தவிர்க்கும்படி Datuk M Kumar வலியுறுத்தினார்.

பிரதமர் அன்வாருக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருவரையும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk M Kumar தலைமையிலான சிறப்புக் குழு 24 மணிநேரத்தில் அடையாளம் கண்டு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *