வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கென்யாவின் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு
- Tamil Malar (Reporter)
- 24 Nov, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
நைரோபி (கென்யா), நவ. 24-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதிலும் ஏழை மக்களுக்கு மலிவு விலை வீடுகளை வழங்குவதிலும் கென்யா காட்டும் உறுதியான அர்ப்பணிப்பை வெகுவாகப் பாராட்டினார். இதனை “உண்மையிலேயே அசாதாரணமான தலைமைத்துவம்” என்று அவர் வர்ணித்தார்.
கென்ய அதிபர் வில்லியம் சமோயி ரூட்டோ நேற்றிரவு நடத்திய அரசு விருந்தில் உரையாற்றிய பிரதமர், மலேசியாவும் தீவிர வறுமையை ஒழிப்பதற்கும் ஏழைகளுக்கு வீடமைப்பு வசதி செய்து தருவதற்கும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
“நானும் உங்களைப் போலவே, வறுமையை ஒழிப்பதிலும் ஏழை மக்களுக்கு உரிய வீடுகளை வழங்குவதிலும் மிகுந்த ஆர்வமும் உறுதியும் கொண்டவன்” என்று பிரதமர் உருக்கமாகத் தெரிவித்தார்.
கென்யாவின் உயரமான இலக்கு திட்டத்தைச் சுட்டிக்காட்டிய அவர், குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தரும் திட்டம் உலகளாவிய ரீதியில் பாராட்டுக்குரியது என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



