பிரதமர் அன்வாரின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மீதான விசாரணை! SPRM விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 26,

பிரதமர் Datuk Seri Anwar Ibrahimக்குச் சொந்தமான 20 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட சோதனையில் ஆதாரமற்ற பணப்பரிவர்த்தனைகள் ஏதுமில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு பண மோசடிகளில் சம்மந்தப்பட்டிருப்பதாக நிதி அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்த Datuk Seri Anwar Ibrahim எதிர்நோக்கிய வழக்குடன் தொடர்புடைய சோதனை இது என மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கமளித்துள்ளது. 

இது ஒரு வழக்கமான சோதனை மட்டுமே என்றும் எந்தவொரு குற்றப்பின்னணி தொடர்பான விசாரணை இல்லை என்று மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.  கடந்த 2018 Wikileak எனும் பதிவில் அன்வார் வெளிநாட்டு வங்கிகளின் மூலமாகத் தவறான பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அன்வாரின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் முறையாக AUDIT செய்யப்பட்டிருப்பதாகவும் சர்ச்சைக்குரிய பணப் பரிவர்த்தனைகள் ஏதும் கண்டறியப்படவில்லை என மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கமளித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *