ரபிசி மீது தொடரும் தாக்குதல் – ரமணனுக்கு எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 7-

பி.கே.ஆர் கட்சியின்முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரபிசி ரம்லி, தன்னைக் குறிவைத்து தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் நடத்தினால், என்னைத் தாக்கும் நபர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரபிஸி, அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் உட்பட சிலர் திட்டமிட்ட முறையில் தன்னை விமர்சித்து வருவதாகக் கூறினார். இருப்பினும், DATUK SERI RAMANAN அதிகமாக பேசுவது தனக்கே நன்மையாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜோகூர் மாநிலத்தில் நடைபெற்ற PKR மாநாட்டில், பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம், ரமணனின் கருத்துகளைத் திறம்பட எதிர்த்ததற்கு ரபிசி நன்றி தெரிவித்தார். அந்த நடவடிக்கை, கட்சிக்குள் இன்னும் ஒழுக்கம், சேவை, தியாகம் மற்றும் போராட்டத்தின் மதிப்பைப் புரிந்துகொள்ளும் சிலர் இருப்பதைக் காட்டுகிறது என்று ரபீஸி கூறினார்.

மேலும், பொதுமக்கள் முன்பாகப் பிரதமருக்கு அமைச்சர் தேர்வில் தவறு செய்ய வேண்டாம் என்று ரமணன் அறிவுரை கூறியதை அவர் “அகந்தை” என விமர்சித்தார். இதன் மூலம், தன்னை பொருளாதார அமைச்சராக தேர்ந்தெடுத்த பிரதமர் தவறு செய்தார் என ரமணன் மறைமுகமாக கூறியதாக ரபிசி சுட்டிக்காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *