ஈரான் இஸ்ரேல் போரில் மேல்நாடுகள் தலையிட கூடாது!
- Sangeetha K Loganathan
- 08 Jul, 2025
கோலாலம்பூர், ஜுலை 8: ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமான போரில் மலேசியா ஈரானுக்கு ஆதரவாக இருப்பதில் தவறேதுமில்லை என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார். அணு ஆயுதத்தை இஸ்ரேல் வைத்திருக்கிறது எனும் போது ஏற்றுக் கொண்ட மேலைநாடுகள், ஈரான் அணுசக்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டாலே போர் தொடுப்பதில் எந்தவொரு நியாயமும் இல்லை என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார். ஒரே விசயத்தில் இஸ்ரேலுக்கு ஒரு நிலைபாட்டையும் ஈரானுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுப்பது முறையானது அல்ல என்றும், இரு நாடுகளுக்கிடையிலான போரில் மற்ற நாடுகள் போரை மேலும் தீவிரப்படுத்தக்கூடாது எனவும் Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார்.
மலேசியா எந்த நாட்டின் போரையும் அங்கீகரிக்கவில்லை. இரு நாடுகளுக்கிடையிலான போர் எனும் போது மலேசியா நடுநிலையாக இருந்து வருகிறது. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மலேசியா குரல் கொடுத்துள்ளது. மலேசியாவின் வெளியுறவுக் கொள்கையிலும் மலேசியாவின் உள்நாட்டு விவகாரங்களையும் பாதிக்காத வகையில் மலேசியா இஸ்ரேல் ஈரானுடனானப் போரைக் கையாள விரும்புவதாகவும் ஈரான் அதன் அணுசக்தி சோதனையை விரிவுப்படுத்துவதில் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகத் தாம் கருதவில்லை என்றும் Datuk Seri Anwar Ibrahim விவரித்தார்.
Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim menegaskan Malaysia menyokong Iran secara prinsip dalam konflik Iran-Israel tetapi kekal berkecuali. Malaysia tidak mengiktiraf sebarang perang dan menolak campur tangan kuasa besar yang hanya akan memburukkan keadaan serantau.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



