நான் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களா? அன்வார் ஆவேசம்!

top-news

ஜூன் 29,


மக்களாட்சி நாட்டில் நான் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா எனக்கு முன்னாள் பிரதமர்களாக இருந்தவர்கள் மறைமுகச் சர்வாதிகாரியாக இருந்தார்களா என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கேள்வி எழுப்பியுள்ளார். முக்கியமாக நீதித்துறையின் முடிவுகளில் தாம் எந்த வகையிலும் தலையிடவில்லை என்பதைத் தொடர்ந்து நான் தெரிவித்து வந்தாலும் நீதித்துறையால் விடுவிக்கப்படுபவர்களுக்கு நான் தான் காரணம் என்றும் நீதிமன்றங்களைப் பின்னிருந்து நான் இயக்குவதாகவும் என்னை விமர்சிப்பவர்களுக்கு என்ன தான் வேண்டும்? நான் நீதித்துறையைக் கட்டுபடுத்தும் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்களா என பிரதமர் அன்வார் கேள்வி எழுப்பினார்.

ஊழல் வழக்குகளில் DNAA எனும் குற்ற விலக்கு வழங்கப்படுவது முற்றிலும் நீதிபதி சம்மந்தப்பட்டது. அதிலும் ஒரு நீதிபதி மட்டும் இந்த DNAA எனும் விலக்கு வழங்குவதில்லை. குறைந்தபட்சம் 3 நீதிபதிகள் கொண்ட குழுவினர் DNAA வழங்குகிறார்கள். இது முழுக்க முழுக்க நீதித்துறையின் சுதந்திரம், சட்டப்படியும் ஆதாரங்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையிலுமே இந்த DNAA எனும் குற்ற விலக்கு வழங்கப்படுகிறது. பிரதமராக பொறுப்பில் இருக்கும் நான் உட்பட நீதித்துறையைக் கட்டுப்படுத்துவது கூடாத ஒரு செயல் என்றும், நான் நீதித்துறையைக் கட்டுப்படுத்துவதாக மகாதீர் உட்பட எனக்கு முன்னாள் பிரதமராக இருந்தவர்கள் என்னை விமர்சிக்கிறார்கள் என்றால் அவர்கள் பிரதமராக இருந்த போது இது போல நீதித்துறையைக் கட்டுப்படுத்தி சர்வாதிகாரத்துடன் ஆட்சி நடத்தினார்களா எனும் கேள்வியைப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கேள்வி எழுப்பியுள்ளார்.


Perdana Menteri Anwar Ibrahim menegaskan beliau tidak campur tangan dalam kehakiman. Anwar persoal dakwaan dirinya mengawal keputusan DNAA dan menempelak pihak yang menuduhnya mahu menjadi diktator seperti bekas pemimpin yang pernah menyalahguna kuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *