நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறேன்! அன்வார்!

- Sangeetha K Loganathan
- 19 May, 2025
மே 19,
நடைபெற்று வரும் பி.கே.ஆர் கட்சியின் தேசிய பொறுப்புக்கானத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவினாலும் யாரும் யாரையும் விரோதியாக எண்ண வேண்டாம் என பி.கே.ஆர் கட்சியின் தலைவரும் பிரதமருமான Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறேன். விசுவாசத்தை வெளிப்படுத்த தேர்தல் ஒரு நேரம் இல்லை. தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாக இருந்தாலும் எதிரிகளாக இருக்க வேண்டாம் என Datuk Seri Anwar Ibrahim கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு சர்ச்சையையும் கிண்டாமல், அதனைச் சுமூகமாகத் தீர்க்க என்ன வழியோ அதைச் செய்யுங்கள் என கட்சி உறுப்பினர்களும் வேட்பாளர்களுக்கும் Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார். தற்போது போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நான் அறிவேன், அவர்கள் அனைவருமே தகுதியானவர்களாகவும் நல்ல அடையாளத்தையும் கொண்டுள்ளனர். துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் இருவருக்குமே எனது முழுமையான ஆதரவு உள்ளது. இருவரின் நோக்கமும் பி.கே.ஆர் கட்சியின் வளமான எதிர்காலம் குறித்தானச் சிந்தனை தான் என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
Datuk Seri Anwar Ibrahim menyeru agar ahli PKR tidak bermusuhan walaupun bersaing dalam pemilihan parti. Beliau menegaskan sedang memerhati dengan tenang dan mengingatkan semua agar menyelesaikan isu dengan harmoni demi masa depan PKR yang lebih baik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *