அன்வார் முன்னாள் பிரதமர்களை மதிப்பதில்லை! – பெர்சாத்து குற்றச்சாட்டு!

top-news

ஜூலை 6,


பிரதமர் Datuk Seri Anwar Ibrahim முன்னாள் பிரதமர்களை மதிப்பதில்லை என BERSATU கட்சியின் உதவித் தலைவரும் பேராக் மாநில முன்னாள் மெந்திரி பெசாருமான Datuk Seri Ahmad Faizal Azumu சாடினார். மக்களுக்குத் தேவையான ஆட்சியைத் தான் எல்லா பிரதமர்களும் வழங்குவார்கள். மக்கள் நலனுக்காகச் செயல்பட்ட முன்னாள் பிரதமர்களான Tun Dr Mahathir Mohamad, Tan Sri Muhyiddin Yassin, Datuk Seri Ismail Sabri Yaakob வலியுறுத்தும் கருத்துகளைப் பிரதமர் அன்வார் ஒரு நாளும் செவிசாய்ப்பதில்லை என முன்னாள அமைச்சருமான Datuk Seri Ahmad Faizal Azumu தெரிவித்தார். 

குறிப்பாகத் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள SST வரி விரிவாக்கம் தொடர்பாக முன்னாள் பிரதமர்களான Tun Dr Mahathir Mohamad, Tan Sri Muhyiddin Yassin, Datuk Seri Ismail Sabri Yaakob ஆகியோரின் கருத்துகளையும் அன்வார் கேட்டிருக்க வேண்டும் என Datuk Seri Ahmad Faizal Azumu வலியுறுத்தினார். இது மக்களைப் பாதிக்கும் ஒரு திட்டம் என்பதால் இதற்கு அனைத்து அனுபவமிக்க தலைவர்களின் ஆலோசனைகளையும் அன்வார் பெற்றிருக்க வேண்டும். தாம் பேராக் மாநில மெந்திரி பெசாராக இருந்த போது அரசு திட்டங்களைச் செயல்படுத்தும் முன்னர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தாம் கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் Datuk Seri Ahmad Faizal Azumu சுட்டிக்காட்டினார்.


Datuk Seri Ahmad Faizal Azumu mendakwa Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim tidak menghormati pandangan mantan perdana menteri seperti Tun Dr Mahathir Mohamad, Tan Sri Muhyiddin Yassin dan Datuk Seri Ismail Sabri Yaakob terutamanya berkaitan isu peluasan cukai SST.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *