அன்வாரின் உடல்நலக்குறைவு! பொய்செய்திகளைப் பரப்பாதீர்!
- Thinagaren Sanggaren
- 02 Nov, 2025
நவம்பர் 2,
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உடல்நலக்குறைவால் இன்று பகாங்கிற்குச் செல்லவேண்டிய அலுவல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக Datuk Seri Anwar Ibrahim-இன் உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் உண்மையில்லை என பிரதமர் துறை தெரிவித்துள்ளது. தவறான ஊகங்களைக் கொண்ட செய்திகளைப் பரப்ப வேண்டாம் என பிரதமர் துறை கேட்டுக்கொண்டது.
அன்வாருக்கு முதுகு வலி ஏற்பட்டிருப்பதாகவும் கடுமையான முதுகு வலியால் இன்று ஒரு நாள் அவர் ஓய்வில் இருக்க வேண்டிய ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் இன்று பகாங்கில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim பங்கேற்கவில்லை என பிரதமர் துறை விளக்கமளித்துள்ளது. இந்த நிகழ்ச்சி இறுதி நேரத்தில் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் பகாங்கில் அன்வாருக்காகக் காத்திருந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



