அன்வார் உடனே ராஜினாமா செய்ய வேண்டி MIPP வலியுறுத்து!
- Thinagaren Sanggaren
- 14 Jul, 2025
ஜூலை 14,
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மக்கள் மீது வைத்திருந்த பொறுப்பையும் நம்பிக்கையையும் தவற விட்டுவிட்டார் என்றும் இந்தியர்களை அன்வார் மறந்துவிட்டார் என்றும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி (MIPP) இளைஞரணி தெரிவித்தனர். அன்வாரின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்குச் சுமையை வழங்குவதால் அன்வார் உடனடியாகப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென மலேசிய இந்தியர் மக்கள் கட்சி (MIPP) இளைஞரணி தலைவர் ஜஸ்தின் பிரபாகரன் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூலை 26 TURUN ANWAR பேரணியில் அன்வாரின் ஆட்சியால் ஏற்பட்டிருக்கும் சிக்கலையும் இந்தியர்களுக்கானப் பின்னடைவுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாக பெரிக்காத்தான் இளைஞர் பிரிவின் துணைத் தலைவருமான Justin Prabakaran தெரிவித்தார். அடிப்படை பொருள்கள் விலை, மெட்ரிக்குலேசனில் இந்திய மாணவர்கள் இல்லாதது, அமைச்சரவையில் இந்தியர் இல்லாதது, SST வரிவிரிவாக்கம், மின் கட்டண உயர்வு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இந்தியர் மக்கள் கட்சி (MIPP) இளைஞரணி தலைவரும் பெரிக்காத்தான் இளைஞர் பிரிவின் துணைத் தலைவருமான Justin Prabakaran தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



