தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பு: பிரதமர் வாழ்த்து
- Surendran Sumdraraj
- 12 May, 2026
கோலாலம்பூர், மே 12-
தமிழ் திரைப்பட நடிகரும் தற்போது அரசியல்வாதியுமான C. Joseph Vijay தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றதற்கு மலேசிய பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு மற்றும் மலேசியா இடையே நீண்டகால வரலாற்று, கலாச்சார மற்றும் மக்கள் தொடர்புகள் உள்ளன. புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜயுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன்,” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மலேசியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவு பல தலைமுறைகளைக் கடந்த ஆழமான மனிதநேய மற்றும் பண்பாட்டு பிணைப்புகளின் அடிப்படையில் உருவாகியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
“புதிய முதலமைச்சருடன் இணைந்து இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த மலேசியா தயாராக உள்ளது,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



