ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது!
- Thinagaren Sanggaren
- 25 Dec, 2025
டிசம்பர் 25,
ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அம்னோ அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டியதற்கான மிக சிறந்த நேரம் இது என்றும் அம்னோவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான Tengku Razaleigh Hamzah வலியுறுத்தினார். முன்னாள் பிரதமரும் முன்னாள் பாரிசான் தலைவருமாகிய நஜீப்பைத் தற்காப்பதில் ஒற்றுமை அரசாங்கம் தவறிவிட்டதாக Tengku Razaleigh Hamzah குற்றம்சாட்டினார். நஜீப் இப்போது பாரிசான் தலைவர் இல்லை என்றாலும் பாரிசான் துவண்டு போயிருந்த நேரத்தில் அம்னோவையும் பாரிசானையும் எழுச்சிப் பெற வைத்தவர் Datuk Seri Najib Tun Razak.
மலாய் ஆட்சியாளர்கள் நஜீப்பிற்கு வழங்கியிருக்கும் அரசு மன்னிப்பை நீதிமன்றம் நிராகரித்திருப்பது வெளிப்படையான பழிவாங்கும் செயல் என்றும் இப்படியான ஓர் அரசாங்கத்தை அம்னோ ஆதரிக்க வேண்டுமா என்பதை அம்னோ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குவா முசாங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Tengku Razaleigh Hamzah தெரிவித்தார்.
பதவிக்காகவும் ஆட்சி அதிகாரத்திற்காகவும் நஜீப்பிற்கு நாம் துரோகம் செய்துவிட்டோம் என்கிற இழிவான வரலாற்றை உருவாக்கிவிட வேண்டாம் என அம்னோ தலைமைக்கு Tengku Razaleigh Hamzah வலியுறுத்தினார். நான் இப்பவும் அம்னோக்காரன் தான். அந்த அக்கறையில் தான் இதைச் சொல்கிறேன். ஒற்றுமை அரசாங்கத்திற்கு அம்னோ வழங்கியிருக்கும் ஆதரவை மீட்டுக்கொள்ள வேண்டும் என்பதே அம்னோவின் கடைநிலை தொண்டரின் விருப்பம் என Tengku Razaleigh Hamzah தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



