அன்வாருக்கு என்மீது பயமா? DR.MAHATHIR

top-news
FREE WEBSITE AD

SG4 பொருளாதார முதலீட்டின் வாயிலாக TERENGGANU , KELANTAN , PERLIS , KEDAH என 4 மாநிலங்கள் கூட்டு சேர மகாதீரின் வழிகாட்டல் முக்கியமாக இருக்கும் நிலையில் பொருளாதார ரீதியில் எதிர்க்கட்சி மாநிலங்கள் ஒன்று சேர்வதால் அன்வாருக்குப் பயமா என SG4 அலோசகரான முன்னாள் பிரதமர் DR.MAHATHIR கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தின் வருவாய்க்கு ஏற்ப முதலீடுகளைப் பங்கிட்டுக் கொள்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இருக்கும் நிலையில் இந்த SG4 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெறும் முதலீடுகளும் லாபமும் குறிப்பிட்ட நான்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காகச் செலவிடப்படும் நிலையில் இதனால் மடானி அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் SG4 திட்டத்தின் ஆலோசகராகத் தாம் இருப்பதை அன்வார் விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிவதாகவும், இத்திட்டத்தால் மடானி அரசுக்குப் பாதிப்பு வந்துவிடுமோ எனும் அச்சம் அன்வாருக்கு இருப்பதைத் தாம் உணர்வதாகவும் DR.MAHATHIR தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *