பெரிக்காத்தானில் இணைய பல கட்சிகள் விண்ணப்பம்!
- Shan Siva
- 17 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 16: பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் சேர ஆர்வமுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து, குறிப்பாக உயர்மட்டத் தலைவர்களால் வழிநடத்தப்படும் கட்சிகளிடமிருந்து வந்த பல விண்ணப்பங்களை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎன் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார், கட்சிகளிடம் அவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை, அமைப்பு பலம் மற்றும் பின்னணி குறித்த தகவல்களை வழங்குமாறு கூட்டணி கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.
அவர்களின் விண்ணப்பங்களை தாங்கள் முறையாகப் பரிசீலிப்பதற்கு இந்தத் தகவல்கள் முக்கியமானவை என்று கோல திரெங்கானுவில் நடைபெற்ற பாஸ் பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
திரெங்கானு மந்திரி பெசாராகவும் இருக்கும் சம்சுரி, அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் பிஎன் உச்ச மன்றக் கூட்டத்தில் இந்த விண்ணப்பங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
பல்வேறு கட்சிகளின் பங்கேற்பின் மூலம் பெரிகாத்தானை வலுப்படுத்துவதில் அனைத்துக் கட்சிகளும் திறந்த மனதுடன் இருக்கும் என்று தாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்சா ஜைனுதீனுடன் தொடர்புடைய கட்சிகள் சேர்க்கப்படுவது குறித்துக் கேள்விக்கு, சம்சுரி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



