ஐடிலதா கொண்டாட்டத்திற்கு 65 பசுக்கள்! தானமாக வழங்கினார் வான் அசிசா

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 5: பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் வரவிருக்கும் ஐடிலாதா கொண்டாட்டத்துடன் இணைந்து பலி செலுத்தும் சடங்கிற்காக 65 பசுக்களை ஒப்படைத்தார்.

அரசு சாரா நிறுவனங்கள், சூராவ் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ள மசூதிகளின் பிரதிநிதிகளுக்கு அவை விநியோகிக்கப்பட்டன.

ஐடிலாதா தியாகத்திற்காக பசுக்களைத் தாராளமாக நிதியுதவி செய்த அனைத்து தரப்பினருக்கும் டாக்டர் வான் அசிசா தனது நன்றியைத் தெரிவித்தார். ஏனெனில் இது ஒரு வழிபாட்டுச் செயல் மட்டுமல்ல, சமூகத்திற்கும் பயனளிக்கும் செயலும்கூட என அவர் கூறினார்.

பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் மற்றும் கோலாலம்பூர் நகர மண்டபம் (டிபிகேஎல்) ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹயாதுல் கமில் டெர்முடி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்!

Datuk Seri Dr Wan Azizah Wan Ismail menyerahkan 65 ekor lembu untuk ibadah korban sempena Aidiladha kepada surau, masjid dan agensi kerajaan. Beliau berterima kasih kepada semua penyumbang atas usaha murni yang memberi manfaat kepada masyarakat setempat.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *