Kapar துப்பாக்கிச் சூடு: தப்பியோட முயன்ற சந்தேகநபர்கள் கார் மோதியதில் காயம்
- Shan Siva
- 05 Mar, 2026
ஷா ஆலம், மார்ச் 5: Kapar பகுதியில் இன்று காலை லாரி ஓட்டுநரை இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, மற்றொரு வாகனம் மோதியதில் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை சுமார் 9 மணியளவில்
நிகழ்ந்ததாக Selangor மாநில காவல்துறை தலைவர் Shazeli Kahar தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் லாரி ஓட்டுநரை நோக்கி
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறினார்.
அந்தச் சம்பவத்தை பார்த்த மற்றொரு வாகன ஓட்டுநர், சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களை கார் மோதியதாக
நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் சந்தேகநபர்களாக கருதப்படும் இருவரும்
காயமடைந்துள்ளனர். எனினும், லாரி ஓட்டுநரின் உடல்நிலை குறித்து
இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று
வருவதாகவும், காவல்துறை விசாரணை அதிகாரிகள் மற்றும்
ஃபொரென்சிக் குழு சம்பவ இடத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர்
தெரிவித்தார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும்
காணொளியில், காவல்துறையினர் சம்பவ இடத்தை
முற்றுகையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதும், ஒருவர்
தரையில் அசைவின்றி கிடப்பதும் காணப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



