MACC புதிய தலைமை ஆணையர் நியமனம்
- Shan Siva
- 25 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 25: மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் அடுத்த தலைமை ஆணையராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹலீம் அமான் தேர்வுசெய்யபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2020-ல் முதன்முதலில் நியமிக்கப்பட்டதிலிருந்து மூன்று முறை ஓராண்டு கால நீட்டிப்புகளைப் பெற்ற பிறகு, மே 12 அன்று பதவிக்காலம் முடிவடையும் அஸாம் பாக்கிக்குப் பிறகு இவர் இந்தப் பதவியைப் பெறுகிறார்.
69 வயதான ஹலீம், 2005-ல் நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டதில் இருந்து தொடங்கி, தெமர்லோ மற்றும் குவாந்தான் ஆகிய இடங்களில் பணியாற்றி, 20 ஆண்டுகளுக்கும் மேலான நீதித்துறை அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
2007-ல், அவர் உயர் நீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற்று, 2023-ல் ஓய்வு பெறுவதற்கு முன்பு பினாங்கு, ஜோகூர் பாரு மற்றும் ஷா ஆலம் ஆகிய இடங்களில் பணியாற்றினார்.
இந்த நியமனத்திற்கான பரிந்துரையை பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேற்று மாட்சிமை தங்கிய மாமன்னர்சுல்தான் இப்ராஹிமிடம் சமர்ப்பித்ததாகவும், அவர் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு MACC சட்டத்தின் துணைப்பிரிவு 5(1)-இன் கீழ் செய்யப்பட்ட ஹலீமின் நியமனம் மே 13 அன்று நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



