பாரிசானுடன் பேச்சுவார்த்தைக்கு நான் ஒப்புதல் அளித்தேன்! - முகைதீன் குற்றச்சாட்டுக்கு சம்சுரி பதில்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 16: நெகிரி செம்பிலான் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் நேஷனலுடன்  பேச்சுவார்த்தை நடத்தியதில் பாஸ் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் கூறிய குற்றச்சாட்டுகளை பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார் மறுத்துள்ளார்.

 இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாஸ் கட்சியின் உதவித் தலைவராகவும் இருக்கும் சம்சுரி, ஆகஸ்ட் 1 தேர்தலுக்கான தேர்தல் ஒப்பந்தம் குறித்து பாரிசான் நேஷனலுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் ஒப்புதல் அளித்ததாகக் கூறினார்.

பெர்சாத்து தலைவர் வெளியிட்ட அறிக்கையைக் குறிப்பிட்டு, அனைத்து ஆரம்பகட்ட கலந்துரையாடல்களும் கட்சிகளுடனான சந்திப்புகளும் பெரிகாத்தான் நேஷனல் தலைவர் என்ற முறையில் தனது அறிவுக்கு உட்பட்டு ஒப்புதலோடும் நடத்தப்பட்டன  என்று அவர் கூறினார்.

இந்த விஷயங்கள் பின்னர் இன்றைய கூட்டத்தில் பெரிகாத்தான் நேஷனல் உச்ச மன்றத்தால் இறுதி செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில இடங்களை பாஸ், வவாசான், கெராகான் மற்றும் எம்ஐபிபி கட்சிகளுக்கு இடையே ஒதுக்கீடு செய்ய பெரிகாத்தான் நேஷனல் உச்ச மன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக சம்சுரி கூறினார்.

கூட்டணியின் சின்னத்தின் கீழ் PN வேட்பாளர்கள் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்பதற்கும் மன்றம் ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

மற்ற PN கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமலும், கூட்டணியின் உச்ச மன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலும், தேர்தல் ஒப்பந்தம் குறித்து BN உடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்காக PAS-ஐ முகைதீன் விமர்சித்திருந்தர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *