ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம் உருவானது எப்படி

top-news
FREE WEBSITE AD

உலகளவில் பல்வேறு தினங்கள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது மகளிர் தினம், குழந்தைகள் தினம், பெற்றோர் தினம், காதலர் தினம் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த தினங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் முட்டாள்கள் தினத்திற்கு கொடுப்பதில்லை என்று தெரியவில்லை. தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பலரும் வேலை போன்ற பல்வேறு காரணங்களால் மனஅழுத்தத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் முட்டாள்கள் தினத்தை கொண்டாடும் போது அவர்களுக்குள் இருக்கும் மனஅழுத்தம், விலகி மனது லேசாகும்.

நம் வாழ்க்கையில் பின்னேக்கி பள்ளி பருத்திற்கு சென்று ஏப்ரல் 1-ம்தேதியன்று சக நண்பர்களிடம், வீட்டில் உள்ளவர்களிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட சென்ற அந்த நாட்களை மறக்க முடியாது.

அதே போல் நண்பர்களையும், சகோதரிகளையும், சகோதரர்களையும், வீட்டில் உள்ளவர்களையும் ஏமாற்ற உன் சட்டையிலே என்ன கற ? உன் பின்னே நாய் வருது பாரு..? உன் தோள் மேல பல்லி இருக்குது பாரு.. என்று நாம் கையாட்ட உத்திகளை இன்று நினைத்து பார்த்தாலும் உதட்டின் ஓரம் மெல்லிய சிரிப்பு வந்து போகும்.

அதேபோல ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் அதில் இருந்த ஆர்வமும் இன்றும் மறக்க முடியாத பசுமை நினைவுகளாகும்.

இப்படி பலரையும் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் சென்ற முட்டாள்கள் தினம் எப்படி உருவானது? அதன் வரலாற்றுப் பின்னணியில் உள்ள கதைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

1500-களில் ஐரோப்பியர்கள் கடைப்பிடித்த ஒரு பழக்கமாக ஏப்ரல் 1 கூறப்படுகிறது. அதேபோல் இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

கிரிகோரியன் நாட்காட்டியானது 1582-ல் போப்கிரிகோரி Xlll-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஜனவரி 1 புத்தாண்டு தினமாக கொண்டாப்படுகிறது. எனினும் பலர் இதை ஏற்றுக்கொள்ள மறுத்து புத்தாண்டு தினத்தை ஏப்ரல் மாதத்தில் கொண்டாடி வருகின்றனர். எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் ஆனது.

அதுமட்டுமின்றி அந்த காலத்தில் செய்திகள் வேகமாகப் பயணிக்கவோ, சகலரையும் சென்றடைவதற்கோ தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை என்பதே உண்மை. அதனாலேயே புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு மாறியது என்ற செய்தி அனைவருக்கும் தெரியாது. அவர்கள் ஏப்ரல் 1-ம் தேதியைக் கொண்டாடிக்கொண்டே இருந்தனர். இதனால் ஜனவரி 1-ஐ புத்தாண்டு தினமாக அனுசரிக்க மறுப்பவர்களை மற்றவர்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர். மேலும் அவர்களை ‘முட்டாள்களின் தூதுவர்களாக’ கேலி செய்தனர்.இவ்வாறு முட்டாள்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுதான் காரணம் என்பதற்கு சான்றுகள் ஏதுமில்லை.1508-ம் ஆண்டிலேயே பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. 1466-ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இது முதன்முதலில் 1852-ல் கொண்டாடப்பட்டது, அப்போது பிரான்ஸ் ஜூலியன் நாட்காட்டியிலிருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது, மேலும் சிலர் இது பருவங்களின் திருப்பத்துடன் தொடர்புடையது என்று கூறுகிறார்கள். ஏப்ரல் முட்டாள்கள் தினம் பல நூற்றாண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏப்ரல் முட்டாள்கள் தினம் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தாலும், அதன் சரியான தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது.

எதுவாக இருந்தாலும் ஏப்ரல் 1-ம்தேதி அனைத்து முட்டாள்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இது நகைச்சுவைக்காக கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாளில் ஒருவரை நகைச்சுவையாக ஏமாற்றி, பாதிக்கப்பட்டவர்களை ஏப்ரல் முட்டாள்கள் (april fools) என்று அழைக்கின்றனர். ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம், ஒவ்வொரு குறும்புக்காரருக்கும் பிடித்த நாளாகும். இன்றைய நாள்(ஏப்ரல் 1-ம்தேதி) ஏமாற்றுவதையும் மற்றும் ஏமாறுவதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளும் ஒரு தினம் எ
ன்று பலரால் சொல்லப்படுகிறது

லட்சுமி சுப்பிரமணியம்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *