3000 இந்திய மாணவர்களுக்கு மடிக்கணினி! - ரமணன் அறிவிப்பு
- Shan Siva
- 15 Oct, 2025
கோலாலம்பூர், அக் 15: உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 3,000 இந்திய
மாணவர்கள் Peranti Mahasiswa திட்டத்தின்
கீழ் புதிய மடிக்கணினிகளைப் பெறுவார்கள் என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும்
கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் ஆர். ரமணன் இன்று தெரிவித்தார்.
மொத்தம் 75 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீட்டில், மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா, Yayasan Perkasa Siswa மற்றும் Yayasan Didik Negaraவுடன் இணைந்து, உயர்கல்வி நிறுவனங்களில் புதிதாகச் சேர்ந்த முதலாமாண்டு
மாணவர்களுக்கு பயனளிக்கும் விதமாக இது செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
B40 மற்றும் M40 தரப்புக் குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான
மாணவர்கள் கல்வி அமைச்சினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும்
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக பெறுநர்களின் பட்டியல் மித்ராவின்
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு
இறுதிக்குள் அவர்கள் இந்த மடிக்கணினிகளைப் பெறுவார்கள் என்று ரமணன் கூறினார்.
இந்த நிகழ்வில்,
வரவிருக்கும் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு
முன்னதாக இந்திய சமூகத்திற்கான பல முன்முயற்சிகளையும் ரமணன் அறிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



