கிள்ளான் விபத்தில் பலியானவரின் பிள்ளைகளை 'மாரா' தத்தெடுத்தது!
- Shan Siva
- 01 Apr, 2026
கிள்ளான், ஏப் 1: போதையில் வாகனத்தை செலுத்திய நபரால் கிள்ளானில் பரிதாபமாகப் பலியானவரின் இரு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதாக மாரா அமைப்பு உறுதியளித்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது மூத்த பிள்ளைகளான 9 வயது அகிஃப் அம்ஸ்யார் மற்றும் 7 வயது ஆதிஃப் இஸ் ராய்கல் ஆகியோரை, தங்களின் 'Yayasan Pelajaran Mara' திட்டத்தின் கீழ் வளர்ப்புப் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ள அந்த அமைப்பு முடிவு செய்ததாக மாரா தலைவர் அஸ்ராஃப் வாஜ்தி டுசுகி கூறினார்.
அவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை மாரா அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளானில் உள்ள ஜாலான் ராயா பாராட் சாலையில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்தில், மது மற்றும் போதைப்பொருள் போதையில் இருந்த ஒருவரால் செலுத்தப்பட்ட வாகனம், 33 வயதான இருசக்கர வாகன ஓட்டுநர் அமிருல் ஹபீஸ் ஓமர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். அவருக்கு மூன்று இளம் பிள்ளைகள் உள்ளனர்.
ஆரம்பப் பள்ளி மட்டத்தில் குழந்தைகளுக்கு மாதம் RM120 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், அவர்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும்போது அது RM150 ஆக உயரும் என்றும், மேலும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை தொடர்ச்சியான கண்காணிப்பு இருக்கும் என்றும் அஸ்ராஃப் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



