பெர்சத்துவில் முகைதீனை எதிர்த்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்! – பெர்சத்து இளைஞர் பிரிவு எச்சரிக்கை!

top-news

ஜூலை 9,


பெர்சத்து கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து Tan Sri Muhyiddin Yassin விலக வேண்டும் என்றும் துணைத் தலைவர் Datuk Seri Hamzah Zainudin பெர்சத்து தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் Port Dickson பெர்சத்துத் தொகுதி வலியுறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெர்சத்துவின் தேசிய Armada தகவல் பிரிவுத் தலைவர் Harris Idaham Rashid வலியுறுத்தினார். பெர்சத்து கட்சியில் பிளவை ஏற்படுத்தி தேவையற்ற விளம்பரத்தைச் செய்ய வேண்டாம் என Armada தகவல் பிரிவுத் தலைவர் Harris Idaham Rashid தெரிவித்தார். 

இதனை ஒரு சர்ச்சையாக்கியவர்கள் மீது பெர்சத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்குத் தாம் புகார் அளிக்கவிருப்பதாக Armada தகவல் பிரிவுத் தலைவர் Harris Idaham Rashid தெரிவித்தார். Tan Sri Muhyiddin Yassin தலைமயில் பெர்சத்து வலுவாகச் செயல்பட்டு வருகிறது. முகைதீன் தலைமையை எதிர்த்து தேவையற்ற சிக்கலை ஏற்படுத்த நினைப்பவர்கள் பெர்சத்துவின் உறுப்பினராகவே இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கையையும் பெர்சத்து மேற்கொள்ளும் என Armada தகவல் பிரிவுத் தலைவர் Harris Idaham Rashid எச்சரித்தார். இது தொடர்பாகப் பெர்சத்து உறுப்பினர்கள் தேவையற்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என Armada தகவல் பிரிவுத் தலைவர் Harris Idaham Rashid கேட்டுக்கொண்டுள்ளார்.


Ketua Armada Bersatu, Harris Idaham Rashid menegaskan tindakan tegas akan diambil terhadap mana-mana ahli yang cuba menggugat kepimpinan Tan Sri Muhyiddin Yassin. Armada akan membuat aduan kepada jawatankuasa disiplin bagi mengekang perpecahan dalam parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *