சாரா திட்டத்தின் விற்பனை 100 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப். 8-

சாரா திட்டத்தின் விற்பனை 100 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது என நிதியமைச்சு கூறியது.சாரா அடிப்படை ரஹ்மா பங்களிப்பு விற்பனை செயல்படுத்திய ஏழாவது நாளில் சீராக நடந்தது.

சனிக்கிழமை இரவு 10.30 மணி நிலவரப்படி 1.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட மொத்த விற்பனை 100 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது.பரிவர்த்தனை விகிதம் நேற்று 99 விழுக்காடாக இருந்த நிலையில், 99.9 விழுக்காடாக வெற்றிகரமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆறு நாட்களில் கணினி செயலாக்க திறனை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும்
மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நேற்று அடையப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கப்பட்ட சாரா 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *