முகைதீனுடன் உற்சாகத்தில் சரவணன்! ஒன்று கூடிய பெரிக்காத்தான் TEA M
- Shan Siva
- 21 Oct, 2025
கோலாலம்பூர், அக் 21: தீபாவளி திறந்தவெளி கொண்டாட்டத்தின் போது மஇகா
துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணனை சந்தித்த புகைப்படத்தை ம.சீ.ச தலைவர்
டத்தோஸ்ரீ வீ கா சியோங் நேற்று வெளியிட்டதன் மூலம் பொதுமக்களின் கவனத்தை
ஈர்த்தார்.
பெரிகாத்தான்
தேசிய பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியும் கொண்டாட்டத்தில் கலந்து
கொள்ள வந்ததாக வீ தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
பெரிக்காத்தான்
தேசியக் கூட்டணிக்கு ஆதரவாக மஇகாவும் ம.சீ.சா-வும் பாரிசான் தேசியக் கூட்டணியை
(பிஎன்) விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளுக்கு
மத்தியில் இந்தப் பதிவு வந்துள்ளது.
இருப்பினும்,
தீபாவளி மற்றும் பிற பண்டிகை சந்தர்ப்பங்களில்
சரவணன் அழைப்பிற்கு இணங்கச் செல்வது தனது வருடாந்திர பாரம்பரியத்தின் ஒரு
பகுதியாகும் என்பதை வீ தனது சமூக ஊடகப் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தீபாவளி மற்றும்
பிற பண்டிகை சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் சந்தித்து நமது பன்முகத்தன்மையை
ஒன்றாகக் கொண்டாடும் பாரம்பரியத்தைத் தொடர்வது தனது வருடாந்திர நடைமுறையாகும என்று
அவர் பதிவிட்டுள்ளார்.
சரவணனின் தீபாவளி
திறந்தவெளி இல்லத்திற்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்ட ஒரு காணொளியை பெரிக்காத்தா
தலைவர் டான் ஸ்ரீ முகிதீன் யாசின் ஒரு தனி முகநூல் பதிவில் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளியில்
காணப்பட்ட மற்ற அரசியல் தலைவர்களில் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதிர் மற்றும்
கெராக்கான் தலைவர் டத்தோ டொமினிக் லாவ், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் முன்னாள்
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் ஆகியோர் அடங்குவர்.
இரண்டு
நாட்களுக்கு முன்பு, லிட்டில் இந்தியா,
பிரிக்ஃபீல்ட்ஸில் ஒரு தங்க நகைக் கடை திறப்பு
விழாவில் சரவணனுடன் அஸ்மின் அலி கலந்துகொண்டது அரசியலில் பேசுபொருளான நிலையில் தற்போது
பெரிக்காத்தான் தொடர்ந்து இந்தப் பக்கம் முகம் காட்டுவது, ம.இ. கா – பெரிக்காத்தான் உறவுக்கு பலம் சேர்ப்பதாக உள்ளதாக
பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெரிக்காத்தான்
உடனான ஒத்துழைப்பை கட்சி ஆராயக்கூடும் என்ற பேச்சுக்கு மத்தியில், சமீபத்திய வாரங்களில் மஇகா பாரிசானிலிருந்து
வெளியேறும் சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன;
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



