அவசரத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் தரம் குறித்து சரவாக் தொழிற்சங்கம் கேள்வி!

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், ஜூலை 7-

சரவாக்கில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தும் ஒரு சிறப்பு நடவடிக்கையின்போது, தனியார் பல்கலைக் கழக பட்டதாரிகள் "அவரசமாக பணியில் அமர்த்தப்படுள்ளது" தொடர்பிலான தனது கவலையை சரவாக் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் (எஸ்டியூ) வெளிப்படுத்தி இருக்கிறது.

பொதுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கழகங்களைச் சேர்ந்தவர் தொடர்பில் கோரப்படும், சிறப்பு ஆசிரியர் நேர்காணல் செயல்பாடு அல்லது அவசியமான சோதனைகளுக்கு உட்படாமல், சரவாக்கில் உள்ள பள்ளிகளில் அதுபோன்ற அதிகமான பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக, எஸ்டியூ தலைவர் குலின் சிஜாயாங் தெரிவித்தார்.

"பல சந்தர்ப்பங்களில், தனியார் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள் மலேசிய கல்வியாளர்கள் தேர்வு பட்டியல் போன்ற அத்தியாவசிய தேர்வுகளில் அமரவில்லை அல்லது சிறப்பு ஆசிரியர் நேர்காணல் செயல்முறைக்கு உட்படவில்லை” என்று அவர் கூறினார்.

கல்விச் சான்றிதழ்கள் அல்லது பட்டங்களை வழங்கும் பொதுப் பல்கலைக் கழகங்கள் வழக்கமாக கடுமையான நுழைவுத் தேர்வுகளை அமல்படுத்துவதாகவும் ஆசிரியர் பயிற்சிக் கழகங்களைப் போலவே, மாணவர்களும் எஸ்பிஎம் தேர்வில் குறைந்தபட்சம் 5ஏ மதிப்பெண்களைப் பெற்று, மனோதத்துவத் தேர்வுகள், உடல் தகுதித் தேர்வுகள் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"இந்த அனைத்து நடவடிக்கைகளும் தரமான கல்வியாளர்களை உருவாக்குவதையும், கற்பித்தல் தொழிலின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதையும், உயர்தர மனித மூலதனத்தை வளர்ப்பதையும் உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.

இந்த பலவீனங்கள் காரணமாக, ஆசிரியர்களை பணியில் அமர்த்தும் முறையை, குறிப்பாக அதன் சிறப்பு பணியமர்த்தும் செயல்முறையை மறுபரிசீலனை செய்யுமாறு, மாநில கல்வி சேவை ஆணையத்தை குலின் வலியுறுத்தினார்.

கல்விக்கான பட்டப்படிப்பை முடித்த ஒருவரை நேரடியாக பணியில் அமர்த்தினால், மாணவர்களுக்குப் போதிப்பதற்கான தகுதியை அவர் இயல்பாக பெற்றுவிடுவார் என்று அர்த்தமாகாது என்றும் அவர் கூறினார்."கடுமையான கல்வி வரம்புகளை விதிக்கும் பொது கல்விக் கழகங்களைப் போலல்லாமல், தனியார் பல்கலைக் கழகங்களில் நுழைவதற்கு, எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் பெரும்பாலும் முன்னுரிமை அளிப்பதில்லை" என்று அவர் கூறினார்.

இந்த விசயத்தில் தமது தொழிற்சங்கம் எந்த ஒரு குறிப்பிட்ட தனியார் கல்லூரியையும் குற்றம் சாட்டவில்லை என்றும் தனியார் கல்விக் கழகங்கள் முறையான ஆசிரியர் பயிற்சியின் தரத்தை பூர்த்தி செய்கின்றனவா என்பதை கல்வி ஆணையம் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் குலின் கேட்டுக் கொண்டார்.

Kesatuan Guru Sarawak (STU) bimbang pelantikan segera graduan universiti swasta sebagai guru tanpa tapisan ketat. Mereka gesa penilaian semula proses pengambilan, agar kualiti guru terjamin dan martabat profesion pendidikan dikekalkan demi kepentingan pelajar dan pendidikan negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *