பினாங்கில் பற்றி எரிந்த கார்! - இருவர் பலி
- Shan Siva
- 04 Oct, 2025
பட்டர்வொர்த், அக் 4: இன்று அதிகாலையில் பட்டர் வொர்த் சுங்கை லோகான், ஜாலான் பெர்மாத்தாங் பாருவில் கார் ஒன்று தீ பற்றி எரிந்ததில்
இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீயணைப்பு
வீரர்கள் காலை 7.21 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்ததாகபினாங்கு தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
இந்த விபத்தில் வாகனம் சுமார்
80 சதவீதம் எரிந்து போயிருந்தது.
துரதிர்ஷ்டவசமாக, இருவர் எரிந்த நிலையில் காணப்பட்டனர்.
வயது மற்றும்
இனம் உள்ளிட்ட அவர்களின் அடையாளங்கள் தற்போது தெரியவில்லை.
அவர்களின்
உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கப்பளா பத்தாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர்
மேலும் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



