கட்டிடத்தில் மோதிய கார்! முதியவருக்குக் காயம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 17: பட்டர்வொர்த்தில் உள்ள ஜாலான் ஜெட்டி லாமாவில் புதுப்பிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் பெரோடுவா கெனாரி மோதியதில் 77 வயது முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பட்டர்வொர்த் தீயணைப்பு நிலையத்திற்கு பிற்பகல் 2.03 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, மீட்புக் குழுக்கள் வந்தபோது ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த ஜி. பழனிவேலு என்ற நபர் வாகனம் கட்டுமானத்துடன் மோதுவதற்கு முன்பு கட்டுப்பாட்டை இழந்தார்.

இதனை அடுத்து மீட்புக்குழு பிற்பகல் 2.28 மணிக்கு பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக மீட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக துணை மருத்துவர்களிடம் ஒப்படைத்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *