தேசியக் கொடியைப் பயன்படுத்தும்போது கவனம் அவசியம்! – பிரதமர் வலியுறுத்து

- Shan Siva
- 18 Apr, 2025
பாங்காக், ஏப்ரல் 18: சீன மொழி நாளிதழின் முதல் பக்கத்தில் 'தேசியக் கொடி’ தவறாக சித்தரிக்கப்பட்ட விவகாரம் ‘ஓர் அற்பமான விஷயம் அல்ல; என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எந்த நாட்டிற்கும், தேசியக் கொடி ஒரு முக்கியமான சின்னம் என்று அவர் கூறினார்.
தேசியக் கொடியை ஒரு படமாகவோ
அல்லது விளக்கப்படமாகவோ பயன்படுத்தும்போது அனைத்து தரப்பினரும் கவனமாக இருக்க
வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட சீன பத்திரிகையான
சின் சியூ டெய்லி தனது தவறை விளக்கி மன்னிப்பு கேட்க இடம் கொடுப்போம்.
சட்ட நடைமுறை அதன் போக்கில்
நடக்கட்டும் என்று அவர் தாய்லாந்தின் பாங்காக்கிற்கு தனது பணிப் பயணத்தின்
முடிவில் மலேசிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சின் சியூ டெய்லியின் முதல் பக்கத்தில் பயன்படுத்தப்பட்ட முழுமை பெறாத தேசியக் கொடி பதிவின் சர்ச்சை குறித்து பிரதமர் இவ்வாறு கருத்துரைத்தார்!
Perdana Menteri Anwar Ibrahim menyifatkan isu bendera kebangsaan dipaparkan secara salah oleh akhbar Cina sebagai serius. Beliau menegaskan kepentingan menghormati simbol negara. Namun, akhbar itu diberi ruang memohon maaf dan undang-undang akan berjalan seperti biasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *