பட்டமளிப்பு விழாவிற்கு மரணமுற்ற தனது மகனின் புகைப்படத்தைச் சுமந்து வந்த பெற்றோர்!
- Muthu Kumar
- 10 Nov, 2025
கோலாலம்பூர், நவ 10:
சரவாக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், புற்று நோயால் மரணமுற்ற தனது மகனின் கனவை நிறைவேற்ற மகனது புகைப்படத்தைச் சுமந்து வந்து மேடையில் மகனுக்கான பட்டத்தை வாங்கிய பெற்றோர்களைப் பார்த்து விழா அரங்கே நெகிழ்ச்சியில் உருகியது.
ஜென்னி தென் மற்றும் அவரது கணவர் ஜோசப் பர்னபாஸும் சரவாக் தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக மேடையில் நடந்து வந்தபோது அது ஒரு சோகமான, ஆனால் பெருமையான தருணமாக அமைந்தது.
57 வயதான தம்பதியினர், மறைந்த தங்கள் மகன் ஜான் ஜெரலின் சார்பாக அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றினர்.தங்களது மகன் பட்டம் பெற மிக ஆர்வமாக இருந்ததாக அவர்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.பிப்ரவரி 26 அன்று 25 வயதில் இறந்த அவர்களின் மகனுக்கு, மரணத்திற்குப் பிறகு மின் பொறியியல் இளங்கலை (ஹானர்ஸ்) பட்டம் வழங்கப்பட்டது என்று போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அவருக்கு மிகவும் தீவிரமான புற்றுநோயான சர்கோமா இருப்பது கண்டறியப்பட்டது. அவரது கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பிறகும், அவர் மற்றொரு செமஸ்டரை முடிக்க UTSக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் தனது படிப்பை முடிக்க உறுதியாக இருந்தார் என்று அவரது தாயார் மேலும் கூறினார்.நான்கு உடன்பிறப்புகளில் இரண்டாவதுவரான தனது மகன், மிகுந்த வலியை மீறி தனது இறுதி திட்டத்தை முடிப்பதில் உறுதியாக இருந்ததாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



