பிரிட்டனிலிருந்து 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

லண்டன், ஜூன் 4: மலேசியா வருகை 2026 (VM2026) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பிரிட்டனிலிருந்து (UK) 500,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு வைத்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இங்கிலாந்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதைக் குறிப்பிட்டு, இலக்கை அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

லண்டனில் மலேசிய சுற்றுலாத்துறை மேற்கொண்ட முயற்சிகளில் தாம் திருப்தி அடைவதாகவும்ம் குறிப்பாக பிரிட்டனிலிருந்து 500,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கு தொடர்பாக. இந்த இலக்கை அடைய முடியும் என்று தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

2024 ஆம் ஆண்டில், இங்கிலாந்திலிருந்து 390,035 பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்தனர். இது பார்வையாளர் ரசீதுகளில் RM2.5 பில்லியனுக்கும் அதிகமாக பங்களித்தது என்று குறிப்பிட்டார்!

Timbalan Perdana Menteri Zahid Hamidi menyasarkan 500,000 pelancong dari UK sempena Tahun Melawat Malaysia 2026. Pada 2024, 390,035 pelancong UK melawat Malaysia, menyumbang lebih RM2.5 bilion. Beliau yakin sasaran itu dapat dicapai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *