அரிப் ஐமான் ஏஎப்சி விருதுக்கு முதல் முறையாக பரிந்துரை
- Tamil Malar (Reporter)
- 26 Sep, 2025
கோலாலம்பூர், செப். 26-
செய்தி-வெற்றி மைந்தன்
மலேசிய தேசிய கால்பந்து
அணியின் நட்சத்திர வீரர் அரிப் ஐமான் ஹனாபி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட
முதல் மலேசிய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இந்த விருது வழங்கும்
விழா அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏஎப்சி ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள அரிப் ஐமான்,
கத்தார் தேசிய அணியின் வீரர் அக்ரம், சவுதி
அரேபியாவின் நட்சத்திர வீரர் சேலம் அல் தவ்ஸாரி ஆகியோருடன் கடும் போட்டியை
எதிர்கொள்ளவுள்ளார். இந்த மூவரும் ஆசிய கால்பந்து அரங்கில் தங்கள் திறமையை
வெளிப்படுத்தியவர்கள் ஆவர்.
ஏஎப்சி இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அரிப்
ஐமான் 2024/25 சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு பாராட்டியுள்ளது. ஜொகூர் டாருல் தக்ஸிம் அணிக்காக ஆடிய அவர், ஆசிய சாம்பியன்ஸ்
லீக் எலைட் தொடரில் 16-ஆவது சுற்றுக்கு முன்னேறுவதற்கு
உதவியதுடன், ஐந்து கோல்களை அடித்து அசத்தினார். மேலும்,
உள்ளூர் தொடர்களில் மூன்று பட்டங்களை வென்று தனது அணிக்குப் பெருமை சேர்த்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



