ஹரிமாவ் மலாயா சிங்கப்பூரை 2-1 கோல்கணக்கில் வெற்றி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 6-

புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நடைபெற்ற அனைத்துலக நட்பு ஆட்டத்தில், ஹரிமாவ் மலாயா அணி சிங்கப்பூரை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அணியின் பயிற்சியாளர் பீட்டர் சிக்லமோவ்ஸ்கி, தனது வீரர்கள் இந்த ஆட்டத்திலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டதாகத்
தெரிவித்தார்.

எந்தப் போட்டியும் எளிதானது இல்லை. இன்றைய ஆட்டத்தில் அதை நாங்கள்  உணர்ந்தோம். எதிரணியை நாங்கள் மதிக்கிறோம். மேலும் இந்த ஆட்டத்திலிருந்து அடுத்த போட்டிகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய பல பாடங்களைப் பெற்றோம். வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் ஒட்டுமொத்தமாக பல நேர்மறையான அம்சங்கள் இருந்தன. இருப்பினும், இன்னும் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன என்று சிக்லமோவ்ஸ்கி கூறினார்.இந்த ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா அணியின் வீரர்கள் தங்கள் உறுதியையும், போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தினர். சிங்கப்பூரின் அபாரமான ஆட்டத்திற்கு மத்தியில், மலேசிய அணி தங்கள் முன்னிலையை தக்கவைத்து வெற்றியை உறுதி செய்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *