சபா தேர்தலில் 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாரிசான் தனித்து போட்டியிடும்!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினபாலு, ஆக. 29-

சபா மாநில 17ஆவது தேர்தலில், அனைத்து 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேறு எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிடுவதற்கு வாரிசான் கட்சி ஏகமனதாக முடிவு செய்துள்ளது.

நேற்று, தமது தலைமையில் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக வாரிசான்  கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முஹமட் ஷாஃபி அப்டால் தெரிவித்தார்.

மாநிலத்தை உட்படுத்திய 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட வாரிசான் முடிவு செய்துள்ளது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது இதன் பொருளாகும். இந்த முடிவுக்கு எதிரான எந்த கருத்தையும் யாரும் நம்ப வேண்டாம். இது கட்சியின் முடிவு, மாறாக தலைவரின் தனிப்பட்ட முடிவல்ல", என்றார் அவர்.உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஷாஃபி அப்டால் அவ்வாறு கூறினார்.

தேர்தல் சட்டவிதியின் படி, 17ஆவது மாநில தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சபா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றம் முன்னதாகவே கலைக்கப்படா விட்டால் வரும் நவம்பர் 11ஆம் தேதி, சுயமாகவே கலைந்துவிடும்.

மாநிலம் முழுவதும் நீர் வழங்கல், மின்சாரம், சாலை உள்கட்டமைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவதுடன் சபா மக்களுடன் மட்டுமே வாரிசான் இணைந்து செயல்படும் என்று முஹமட் ஷாஃபி திட்டவட்டமாக தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *