தனது சட்டமன்ற உறுப்பினர்களை ‘வேட்டையாடிய' கட்சிகளுடன் வாரிசான் ‘உறவாடாது' -ஷாபி அப்டால்!
- Muthu Kumar
- 19 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 19 -
தனது சட்டமன்ற உறுப்பினர்களை 'வேட்டையாடிய' எந்த ஓர் அரசியல் கட்சியுடனும் சேர்ந்து வாரிசான் கட்சி பணியாற்றாது என்று, அக்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஷாபி அப்டால் தீர்க்கமாகக் கூறியுள்ளார்.வாரிசான் கட்சியுடன் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றும் தனது விருப்பத்தை காபுங்ஙான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நோர் தெரிவித்திருந்ததாகக் கூறிய ஷாபி, அதன் பின்னர் அக்கூட்டணி வாரிசான் சட்டமன்ற உறுப்பினர்களை “வேட்டையாடிவிட்டது” என்று தெரிவித்தார்.
“அவரிடமே (ஹஜிஜி) கேளுங்கள். அவர் என் வீட்டிற்கே வந்து பேசினார். ஆனால், எதுவும் நிறைவேறுவதற்கு முன்னரே, அவர் என்னை சந்தித்த பிறகு எனது சட்டமன்ற உறுப்பினர்களை எடுத்துக் கொண்டார்.“அப்படி செய்த ஒருவருடன் எப்படி என்னால் ஒத்துழைக்க முடியும் ? ஒருவரின் நேர்மை என்பது வெறும் வார்த்தைகள் அல்லது செயல்களைப் பற்றியது அல்ல. அது அவர்களின் நம்பகத்தன்மையை பற்றியது” என்று ஷஃபி குறிப்பிட்டார். சபா மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடினும் ஷாபியும் கூட்டாக மேற்கொண்ட, ஹஜிஜியை பதவியிலிருந்து வெளியேற்றும் முயற்சி தோல்வியுற்ற பின்னர், கடந்த ஆண்டில் வாரிசான் கட்சி தனது நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை ஜிஆர்எஸ்சிடம் இழந்தது.
அவாங் அஹ்மாட் சா (பெத்தாகாஸ்) முஹமட் முஹமரின் (பாங்ஙி), சோங் சென் பின் (தஞ்சோங் காப்பூர்) மற்றும் நொராஸ்லினா அரிஃப் (குனாக்) ஆகியோரே அந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களாவர். அதற்கு முன்னர், 2020ஆம் ஆண்டு நடந்த சபா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், வாரிசானின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜிஆர்எஸ் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளுக்கு தாவினர். ஜிஆர்எஸ் கூட்டணியுடன் ஒத்துழைக்க விரும்பும் எந்த ஒரு கட்சியும்,அடுத்த சபா மாநில சட்டமன்ற தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்று. ஜிஆர்எஸ் துணைத் தலைமைச் செயலாளர் அர்மிஸான் முஹமட் அலி கூறியிருப்பது குறித்து ஷாபி இவ்வாறு பதிலளித்தார்.
சபா மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து, குறிப்பாக பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பங்காளிக்கட்சிகளுடன் கலந்துபேசுவதற் காக, ஒரு குழு அமைக்கப் படும் என்று சபா மாநில முதலமைச்சருமான ஹஜிஜி அண்மையில் அறிவித்திருந்தார்.பக்காத்தான் ஹராப்பானுடன் சேர்ந்து தாங்கள் ஒத்துழைக் கப் போவதாக, சபாவில் எதிர்க்கட்சியாக செயல்படும் தேசிய முன்னணியும் ஜிஆர்எஸ்ஸும் கூறியிருந்தன. எனினும், மாநில அரசாங் கத்தை உள்ளூர் கட்சிகள்தான் நிர்வகிக்க வேண்டும் என்று ஸ்டார் மற்றும் பிபிஎஸ் கட்சிகள் கூறிவருகின்றன.இந்நிலையில், உள்ளுர் கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றவே தயாராக இருப்பதாக வாரிசான் கூறியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *