பாரிஸ் உலக பேட்மிண்டன்-மலேசிய ஆடவர் இரட்டையர் அதிர்ச்சி வெற்றி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 29-

மலேசிய ஆடவர் இரட்டையர் கூட்டணியான வான் ஆரிப் வான் ஜூனைடி-யாப் ராய் கிங், பாரிஸில் நடைபெறும் உலக பூப்பந்து போட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

உலக தரவரிசையில் 22-ஆவது இடத்தில் உள்ள இந்த மலேசிய இணை, இந்த மதிப்புமிக்க போட்டியில் முதல் முறையாக பங்கேற்று, அடிடாஸ் அரங்கில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் வெறும் 33 நிமிடங்களில் 21-13, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றனர்.

ராய் கிங், தங்களது ஆட்டத்தைப் பற்றி திருப்தி தெரிவித்தார். குறிப்பாக, இரண்டாவது செட்டில் எதிரணியின் அழுத்தத்தை எதிர்கொண்டு மீண்டு வந்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தார். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இரண்டாவது செட்டில் சில எளிய தவறுகளைச் செய்த போதிலும், நாங்கள் மீண்டு வந்து வெற்றி பெற்றோம் என்று அவர் கூறினார்.

உலக தரவரிசையில் 12-ஆவது இடத்தில் உள்ள தாய்லாந்து இணையான கிட்டினுபோங் கெட்ரென்-டெச்சபோல் புவரணுக்ரோவை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *