உதவித் தொகை நிறுத்தப்பட்டு இருந்தும் கோழிக்கான சந்தை விலை நிலையானதாகவே பதிவு!
- Muthu Kumar
- 07 Aug, 2025
கோலாலம்பூர், ஆக.7-
2023ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் தேதி தொடங்கி, கோழி விலைக்கான உதவித் தொகையை அரசாங்கம் நிறுத்திய போதிலும், கோழிக்கான சந்தை விலை நிலையானதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோழி தீவன முறையற்ற வணிகக் கூட்டமைப்பை துடைத்தொழித்த வியூகத்தின் மூலம், முன்னதாக விலைக் கட்டுப்பாட்டுச் சிக்கல்களை எதிர்கொண்ட அம்மூலப்பொருளின் விலையை நிலைப்படுத்த முடிந்ததாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவினத் துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே கூறினார்.
"கோழி தீவன முறையற்ற வணிகக் கூட்டமைப்பை துடைத்தொழித்தது, ஒரு வியூகமாகும். கோழி உற்பத்தி செலவுகளில் 70 விழுக்காடு கோழி தீவனத்திலிருந்தே வருகிறது. எனவே, அதைக் கட்டுப்படுத்தும் போது,கோழி உற்பத்திச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். 2023 நவம்பர் 1 தொடங்கி கே.பி.டி.என்-இல், இன்றுவரை கோழி விலைகள் குறித்த தரவுகளை ஒவ்வொரு நாளும் சேகரித்து, அது உண்மையிலேயே பயனுள்ளதாக இருப்பதை
உறுதிசெய் கிறது," என்றார் அவர்.
கோழியின் சந்தை விலைகள் நிலையாகிவிட்ட வேளையில், குறைந்த விலையிலும் அவை விற்கப்படுவது தரவுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்த 13-வது மலேசிய திட்டத்தின் கீழ், அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஃபுசியா சாலே, நேற்று மக்களவையில் விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



