பகடிவதையால் இரக்கம் இல்லாத ஒரு தலைமுறை உருவாகும் விரைந்து எதிர்ப்புப் பிரச்சாரத்தை செயல்படுத்துங்கள்! - பேரரசர் உத்தரவு
- Shan Siva
- 18 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 18: ஆரம்பப் பள்ளியிலிருந்து தொடங்கி பகடிவதை கொடுமை தொடர்பாக விரிவான எதிர்ப்புப் பிரச்சாரத்தை செயல்படுத்துமாறு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சிறு வயதிலிருந்தே இதனைத் தடுக்கத்
தவறினால்,
மற்றவர்கள் மீது மரியாதை மற்றும் இரக்கம் இல்லாத ஒரு
தலைமுறை உருவாகும் அபாயம் இருப்பதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு சிறு
வயதிலிருந்தே இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கற்பிக்கப்பட வேண்டும்... மேலும்
இதுபோன்ற பிரச்சாரங்கள் மூலம் பரஸ்பர மரியாதை மற்றும் ஒழுக்கத்தின்
முக்கியத்துவத்தை அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று மாமன்னர் சுட்டிக்காட்டினார்.
பகடிவதை என்பது
பாதிக்கப்பட்டவர்களின் மன மற்றும் உணர்ச்சி சம்பந்தோட்ட நல்வாழ்வை சேதப்படுத்துவது
மட்டுமல்லாமல், கடுமையான துயரங்களுக்கும்
வழிவகுக்கும் என்று சுல்தான் இப்ராஹிம் மேலும் கூறினார்.
இதனை நிவர்த்தி செய்வதற்காக
தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட
திருத்தங்கள் இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை
நிரூபித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்தத் திருத்தங்கள் பகடிவதையை
ஒரு கிரிமினல் குற்றமாக ஆக்குகின்றன, இதற்கு 10 ஆண்டுகள் வரை
சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இது தொடர்பாக அமைச்சகங்களுக்கு
இடையேயான அணுகுமுறை அவசியம் என்றும் சுல்தான் இப்ராஹிம் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



