2024 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதுக்கு ஆரோன் சியா,சோ ஆய் யிக் தேர்வு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 3-

மலேசியாவின் மிகச்சிறந்த பேட்மிண்டன் இரட்டையர் வீரர்களான ஆரோன் சியா, சோ வூய் யிக் ஆகியோர் 2024 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேசிய இரட்டையர் ஜோடி, 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வெற்றிகரமாக தக்கவைத்ததுடன்,
2025 ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்த சாதனைகள் அவர்களை 2024 ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு வீரர் விருதுக்குத் தகுதியானவர்களாக ஆக்கியுள்ளன.

இந்த விருதுக்கு ஆரோன்-வூய் யிக் ஜோடி. லீ ஜி ஜியா, மொஹமட் அனிக் காஸ்டன், வோங் வெங் சூன், அப்துல் லத்திப் மஜாக்கிர் ஆகியோரும் விருதுக்குத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்பு, மலேசிய விளையாட்டு அரங்கில் புதிய உயரங்களை எட்டுவதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

இந்த விருது ஆரோன், வூய் யிக் அணியின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டிற்கு ஓர் அங்கீகாரமாகும். இவர்களின் இந்த சாதனைகள் இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாக அமைந்து, மலேசியாவில் பேட்மிண்டன் விளையாட்டை மேலும் மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aaron Chia dan Soh Wooi Yik dicalonkan untuk Anugerah Olahragawan Kebangsaan 2024 selepas kejayaan meraih emas Kejohanan Badminton Asia 2025 dan mempertahankan gangsa Olimpik. Prestasi mereka jadi inspirasi atlet muda Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *